
நடிகை சமந்தா தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டார்கள். பின்பு நாக சைதன்யா சோபிதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சமந்தா இன்னும் திருமணம் செய்துகொள்ளாமலேயே இருக்கிறார். இதற்கிடையில் சமந்தா மையோ சிட்டிஸ் எனும் நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டு சில காலம் சினிமாவில் இருந்து விலகி இருந்தார்.
அதன் பிறகு நோயிலிருந்து குணமடைந்து மீண்டும் பிஸியாக படங்களில் நடிக்க தொடங்கிவிட்டார். சமீபத்தில் சிட்டாடல் ஹனி பனி என்ற படத்தில் நடித்திருந்தார். தற்போது மும்பையில் தான் செட்டில் ஆகி இருக்கிறார் சமந்தா. இந்நிலையில் சமந்தா தனது இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படங்களைப் பகிர்ந்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். ஆனால் அவர் பகிர்ந்த முதல் புகைப்படமே ரசிகர்களின் கமெண்ட்டுகளில் சிக்கிக் கொண்டது.
அதாவது சமந்தாவும், நாக சைதன்யாவும் காதலர்களாக இருந்தபோது வலது முழங்கையில் ஒரே மாதிரியான டாட்டூவை போட்டிருந்தார்கள். ஆனால், சமந்தா நேற்று பகிர்ந்த போட்டோவில் அந்த டாட்டூவானது அழிந்த நிலையில் இருந்தது. இதை பார்த்த ரசிகர்களோ அதை போட்டோஷாப் மூலம் அழித்துள்ளாரா அல்லது நிரந்தரமாகவே அழித்துள்ளாரா என்று ரசிகர்கள் கேள்வியெழுப்பி வருகிறார்கள். ஆனால் நாக சைதன்யாவோ அந்த டாட்டூவை தனது கையில் இன்னமும் அப்படியே வைத்திருக்கிறாராம்.
View this post on Instagram