கொல்லம் மாவட்டத்தின் உலியக்கோவில் பகுதியில் ஒரு கல்லூரி மாணவர் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாணவர் பேபின் ஜார்ஜ் கோமேஸ் (21) என்பவர் மாட்ருகா நகர், உலியக்கோவில் பகுதியில் உள்ள ‘ஃப்ளோரிடேல்’ இல்லத்தில் வசித்து வந்துள்ளார். இதைத் தொடர்ந்து, குற்றவாளியான தேஜஸ் ராஜு (22) தற்கொலை செய்து கொண்ட சம்பவமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேஜஸ் ராஜு, கொல்லம் மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் பணியாற்றும் கிரேடு எஸ்.ஐ ராஜுவின் மகன் ஆவார். பேபின் கொல்லம் ஃபாத்திமா மாதா கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பி.காம் மாணவராக இருந்தார்.

தகவலின்படி, தேஜஸ் ராஜு, பேபின் ஜார்ஜின் சகோதரியை திருமணம் செய்ய விரும்பியதாக கூறப்படுகிறது. ஆனால், குடும்பத்தினரால் பலமுறை மறுப்பு எதிர்கொண்டதால், அவருக்கு கோபம் வளர்ந்ததாகக் கூறப்படுகிறது. இந்தக் கோபமே கொலைக்காண காரணமாக மாறியுள்ளது. கடந்த திங்கட்கிழமை மாலை 6.45 மணியளவில், தேஜஸ் ராஜு ஒரு வெள்ளை நிற Wagon R காரில் பேபினின் இல்லத்துக்கு வந்தார். பெண்கள் அணியும் பர்தா உடையை அணிந்த நிலையில் வீட்டின் கதவைத் தட்டினார். பேபின் கதவைத் திறந்தவுடன் அவரை தாக்க முயன்றார். தடுக்க முயன்ற பேபினை கட்டுப்படுத்திய பின்னர், அவரது மார்பில் இருமுறை கத்தியால் குத்தினார். மேலும், வீட்டில் பெட்ரோல் ஊற்றியும் மிரட்டினார். பேபினின் தந்தை அவரை காப்பாற்ற முயன்றபோதும் அவரையும் கத்தியால் குத்தியுள்ளார்.

பேபின் வீட்டிலிருந்து தப்பியோடிய தேஜஸ் ராஜு, சுமார் 20 மீட்டர் தூரத்தில் சரிந்து விழுந்த பேபினை விட்டுவிட்டுத் தப்பித்தார். பின்னர், அவருடைய கார் கொண்டு செம்மன்முக்கு ரயில் ஓவர் பிரிட்ஜ் அருகே சென்றுவிட்டு, அங்கு அவர் ரயிலுக்கு முன்பாக குதித்து தற்கொலை செய்துகொண்டார். இதற்கிடையில், பேபினை உடனடியாக மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு சென்றும், அவர் அங்கு உயிரிழந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர். அவரது இறப்பிற்குக் காரணம் கல்லீரல் பகுதியில் ஏற்பட்ட கத்திக்குத்து தான் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேஜஸ் ராஜுவின் உடல் ரயிலில் அடிபட்டு துண்டுகளாக பரிதாபகரமாக காணப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர். தற்போது இருவரின் உடல்களும் மாவட்ட மருத்துவமனை திடீர் மரண பிரிவில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.