
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் செல்வகணபதி நகரை சேர்ந்தவர் பிரேம்குமார். இவர் லாரி டிரைவராக வேலை பார்க்கிறார். இவரது மனைவி கற்பகம். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் கற்பகத்திற்கு பெரம்பூரைச் சேர்ந்த ஹரி கிருஷ்ணன் என்ற ஆட்டோ ஓட்டுநருடன் பழக்கம் ஏற்பட்டு கள்ள காதலாக மாறியது. அடிக்கடி ஹரிகிருஷ்ணன் கற்பகத்தின் வீட்டிற்கு வந்து உல்லாசமாக இருந்துள்ளார். நாட்கள் போகப்போக ஹாரி கிருஷ்ணன் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி எப்போது செல்போன் மூலம் தொடர்பு கொண்டாலும் அழைப்பை ஏற்க வேண்டும்.
எப்போது அழைத்தாலும் வர வேண்டும் எனத் தொடர்ந்து கற்பகத்தை தொந்தரவு செய்துள்ளார். இதனால் கற்பகம் ஹரி கிருஷ்ணனுடன் பேசுவதை தவிர்க்க முயற்சி செய்தார். ஆனால் ஹரிகிருஷ்ணன் அவரது வீட்டிற்கு சென்று அடித்து துன்புறுத்தி உள்ளார். நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு ஹரி கிருஷ்ணன் கற்பகத்தின் வீட்டிற்கு சென்று அவரை சரமாரியாக தாக்கியுள்ளார். இதனால் காயமடைந்த கற்பகம் மருத்துவமனையில் சிகிச்சை பார்க்க சென்றுள்ளார்.
அங்கும் ஹரி கிருஷ்ணன் கற்பகத்தை பின் தொடர்ந்து சென்று தாக்கியுள்ளார். இதனால் கற்பகத்தின் மூத்த மகன் தனது தந்தையை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு அம்மாவை யாரோ அடிக்கிறார்கள் என கூறியுள்ளார். இதனால் ஊரிலிருந்து வந்த பிரேம்குமார் ஹரிகிருஷ்ணனை சரமாரியாக வெட்டினார். இதனால் படுகாயமடைந்த ஹரிகிருஷ்ணன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் பிரேம்குமாரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.