கடலூர் மாவட்டம் சிதம்பரம் எல்லையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சரவணன். 2016-ஆம் ஆண்டு சரவணனுக்கு தேவி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இதனையடுத்து கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2017-ஆம் ஆண்டு சரவணன் தனது மனைவியை திருப்பகூரில் இருக்கும் பெற்றோர் வீட்டில் விட்டு வந்து விட்டார். இதனையடுத்து வீட்டிற்கு பின்புறம் தேவி மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது சரவணன் தனது மாமியாரின் வீட்டிற்கு சென்று தேவியுடன் தகராறு செய்து அவரை அடித்து கொன்றது தெரியவந்தது. இந்த வழக்கு மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்தது. இந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம் சரவணனுக்கு ஆயுள் தண்டனையும், 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவு பிறப்பித்தது.