இந்திய கிரிக்கெட் வீரரான பிரித்விஷா ஒரு காலத்தில் கிரிக்கெட்டின் எழுச்சி நாயகனாக வலம் வந்தார். இவர் கடந்த 2018 ஆம் ஆண்டில் அண்டர் 19 உலக கோப்பை போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக செயல்பட்டார். தனது டெஸ்ட் கிரிக்கெட் அறிமுகத்திலேயே சதம் விலாசி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். ஆனால் சமீப ஆண்டுகளாக இவர் தொடர்ந்து கடுமையான சவால்களை எதிர்கொண்டு வருகிறார்.

மும்பை ரஞ்சித் கோப்பை அணியிலிருந்து அவரை நீக்கினர். அதன் பின் நடந்த ஐபிஎல் 2025 ஏலத்தில் எந்த அணியும் அவரை தேர்வு செய்யவில்லை. இதுகுறித்து பலரும் அவரது செயல் திறன் குறைவு அதனால்  அவரை எந்த அணியும் தேர்வு செய்யவில்லை என விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் வீரர் சஷாங்க்சிங் பிரித்விஷாவின் நிலை குறித்து விவரித்துள்ளார், இதில் கிரிக்கெட் கிளப்பில் விளையாடும் போது அவர் தனக்கு அறிமுகமானவர் எனவும் அவர் தன்னுடைய சிந்தனைகளை மாற்ற வேண்டும்.

உடற்பயிற்சி ஒழுங்குமுறைகளை மேம்படுத்தினால் அவர் மீண்டும் சிறப்பான விளையாட்டு வீரராக மாறலாம் எனக் கூறினார். தொடர்ந்து தனது கடின உழைப்பை பிரித்விஷா மேற்கொண்டு வந்தால் எதிர்காலத்தில் சிறந்த வீரராக பல வெற்றிகளை அவரால் குவிக்க முடியும் எனவும் கூறினார். மேலும் இந்திய கிரிக்கெட்டின் எதிர்கால நட்சத்திரமாக யஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ஷூப்மன் கில் ஆகியோர் வலம் வருவர் எனவும் குறிப்பிட்டிருந்தார்.