கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் அருகே வீட்டுக்கு வெளியே இரண்டு வயது குழந்தை விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக குழந்தை அங்கிருந்த தண்ணீர் தொட்டியில் விழுந்து தத்தளித்தது. இதனால் குழந்தை தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தது.

இதுகுறித்து அறிந்த போலீசார் குழந்தையின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.