
அடுத்த மாதம் 22ஆம் தேதி தொடங்கும் ஐபிஎல் தொடர் மே 25ஆம் தேதி வரை முடிவடைகிறது. இதில் பங்கேற்கும் பத்து அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டு உள்ளது. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள அணிகளுடன் தலா இரண்டு முறையும், எதிர் பிரிவில் நான்கு அணிகளுடன் தலா ஒரு முறையும். ஒரு அணியுடன் மட்டும் இரண்டு முறையும் மோத வேண்டும். மார்ச் 22ஆம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டனில் நடக்கும் தொடக்க லீக்கில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி – பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் உடன் மோதுகிறது.
ஐந்து முறை சாம்பியன் ஆன மும்பை இந்தியன்ஸ் அணி தன்னுடைய முதல் சவாலை சென்னை சூப்பர் கிங்ஸ் எதிராக தொடங்குகிறது. இந்த ஆட்டம் மார்ச் 23ம் தேதி நடக்கிறது. இந்நிலையில் ஹர்திக் பாண்டியா ரசிகர்களின் அன்பு மீண்டும் கிடைத்துவிட்டது என்று கூறியுள்ளார். இதுகுறித்து பேசுகையில், “என்னை சுற்றி நடந்த தேவையில்லாத விஷயங்களில் கவனம் செலுத்தாமல் நான் கடினமாக உழைத்தேன்.
டி20 உலக கோப்பை வெற்றிக்கு பிறகு என்னுடைய வாழ்க்கையானது தலைகீழாக மாறிவிட்ட.து எனக்கு எதிராக இருந்த ரசிகர்களின் அன்பு எனக்கு மீண்டும் கிடைத்துவிட்டது” என்று கூறியுள்ளார். ஒரு காலகட்டத்தில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு அதன் பிறகு தூக்கி எறியப்பட்டவர் தான் ஹர்திக் பாண்டியா. தற்போது அவர் ரசிகர்களை மீண்டும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .