18வது ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் தொடரானது வருகிற 22ஆம் தேதி கொல்கத்தாவில் நடைபெறுகிறது. முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன. இதற்கு அனைத்து அணியினரும் தங்களை தீவிரமாக பயிற்சியில் ஈடுபடுத்தி வருகிறார்கள்.  இந்த தொடருக்காக ரசிகர்கள் காத்து கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் ஒவ்வொரு அணியினரும் பயிற்சி போட்டியில் விளையாடுகிறார்கள்.

அந்த வகையில் மும்பை இந்தியன்ஸ் அணியும் விளையாடியது. இந்த போட்டியின் போது  திலக் வர்மா பந்துவீச்சில் அதிரடியான ஆட்டக்காரர் சூரியகுமார் யாதவ் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். இதனால் அவருடைய விக்கெட்டை வீழ்த்தி திலக் வர்மா மகிழ்ச்சியில் கொண்டாடியுள்ளார். மேலும் சூரியகுமார் யாதவிடமும் சென்று கிண்டலாக பேசியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.