பிசிசிஐ இந்திய அணி வீரர்களுக்கு சில கட்டுப்பாடுகள் விதித்தது. அதில் முக்கிய ஒன்று வெளிநாட்டு சுற்றுப்பயணிகளின் போது வீரர்களுடன் அவர்களுடைய குடும்பத்தினர் குறிப்பிட்ட நாட்கள் மட்டுமே தங்கி இருக்க முடியும் என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. வெளிநாட்டில் 45 நாட்களுக்கு மேலான தொடரில் விளையாடினால் 14 நாட்களும் அதற்கு குறைவானது என்றால் ஒரு வாரமும் அவர்களோடு குடும்ப உறுப்பினர்கள் தங்கி இருக்கலாம் என்ற விதிமுறை பல முன்னணி வீரர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. இது குறித்து முன்பாக விராட் கோலி அதிருப்தி தெரிவித்து சில கருத்துக்களையும் கூறியிருந்தார். இதனால் பிசிசிஐ இந்த கட்டுப்பாட்டில் சில தளர்வுகளை உண்டாக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் இந்த கட்டுப்பாட்டில் எந்தவித மாற்றமும் இல்லை என்று பிசிசிஐ செயலாளர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் பேசுகையில், தற்போதைய கொள்கை அப்பைடையே தான் இருக்கும். ஏனெனில் இது தேசத்திற்கும்.  எங்களுக்கும் மிக முக்கியமானது. ஜனநாயக அமைப்பில் மக்கள் தங்களுடைய கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கு உரிமை இருக்கிறது. இதில் மனக்கசப்பு இருக்கலாம் என்பதை பிசிசிஐ அங்கீகரிக்கிறது. அனைவரின் நலன் கருதியையும் இது செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த கொள்கை ஒரே இரவில் உருவாக்கப்படவில்லை. பல தசாப்தங்களாக நடைபெற இருக்கிறது. இது நம்முடைய தலைவர் ரோஜர் பின்னி விளையாடிய காலத்தில் இருந்தே இருக்கிறது. சிறப்பு சூழ்நிலைகளில் விதிமுறைகளை தளத்துவதற்கான ஏற்பாடுகளோடு வெளிநாட்டு சுற்றுப்பயணங்களின் போது வீரர்களுடன் குடும்ப உறுப்பினர்கள் தங்கும் காலத்தை பிசிசி அதிகரித்துள்ளது” என்றும் கூறியுள்ளார்.