
சென்னை மாவட்டம் சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் இருந்து ஒரு பெண் நடந்து சென்றார். அந்த பெண் புறநகர் ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்த பெண்ணின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் அந்த பெண் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது தண்டவாளத்தை கடக்கும் போது ரயிலில் அடிபட்டு உயிரிழந்தாரா? என விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே அந்த பெண் ரயிலில் அடிபட்டு தூக்கி வீசப்படும் காட்சிகள் சோசியல் மீடியாவில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.