
ஐபிஎல் 18 வது சீசன் நாளை தொடங்க உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ் உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொள்கின்றன. தொடக்கப் போட்டியில் நடப்பு சாம்பியன் ஆன கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகிறது. இதனைஎடுத்து 10 அணிகளின் கேப்டன்கள் கூட்டத்தில் நேற்று கலந்து கொண்டார்கள். அதில் பந்தின் மீது எச்சில் தேய்ப்பதற்கான விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டது. அதோடு இந்த விதிமுறையானது இன்னும் இரண்டு ஆண்டுகள் நீட்டிக்கப்படும் என்றும் கூறப்பட்டது.
மேலும் இந்த சீசனில் புதிய விதி ஒன்றும் அமல்படுத்தப்பட உள்ளது. அதாவது இரவு நேர ஆட்டங்களில் இரண்டாவது இன்னிங்ஸின்போது பனிப்பொழிவின் தாக்கத்தால் பந்து ஈரமாகி விடுகிறது. இதனால் பவுலர்களால் பந்தை சரியாக வீச முடியவில்லை. இதனால் பேட்ஸ்மேன்கள் எளிதில் ரன் குவித்து விடுகிறார்கள். இதனை கருத்தில் கொண்டு ஐபிஎல்லில் இரண்டு பந்து பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது இரண்டாவது இன்னிங்ஸில் 10 ஓவருக்கு பிறகு ஒரு பந்து வீசும் அணியின் கேப்டன் பந்து அதிகம் ஈரமாகிவிட்டதாக நினைத்தால் நடுவரிடம் புதிய பந்து கேட்கலாம். எந்த அளவுக்கு ஈரம் இருக்கிறது என்பதை ஆராய்ந்து அதற்கு ஏற்ப பந்தை மாற்றுவது குறித்து முடிவு செய்யப்படும். இந்த புதிய விதி நடப்பு சீசனில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.