கடந்த 1992ஆம் ஆண்டு உலக கோப்பையை வென்று ஒருபோதும் மறக்க முடியாத சாதனை செய்த பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, தற்போதைய காலகட்டத்தில் கடும் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. கடந்த ஒரு தசாப்தத்தில் பாகிஸ்தானின் குறிப்பிடத்தக்க வெற்றிகள் 2017 சாம்பியன்ஸ் ட்ராபி மற்றும் 2021 T20 உலகக் கோப்பி லீக் போட்டியில் இந்தியாவை வெற்றிகொண்டு முடிவடைந்தன. அதனைத் தவிர்த்து, இந்தியாவுடன் நிகழ்ந்த பெரும்பாலான போட்டிகளில் பாகிஸ்தான் தொடர்ச்சியான தோல்விகளை சந்தித்துள்ளது. ஜிம்பாப்வே, அமெரிக்கா, வங்கதேசம் போன்ற பலவீனமான அணிகளிடமும் சமீபத்திய ICC தொடர்களில் தோல்வியடைந்தது பாகிஸ்தானின் நிலையை மோசமாக காட்டுகிறது.

இந்த சூழ்நிலைக்குப் பாகிஸ்தான் கிரிக்கெட்டின் இந்தியாவுக்கு கொண்டிருக்கும் பகைதான் காரணம் என நியூசிலாந்தின் முன்னாள் வீரர் இயான் ஸ்மித் கருத்து தெரிவித்துள்ளார். “பாகிஸ்தான் வீரர்கள் IPL-ல் விளையாட தடை செய்யப்பட்டதால், அவர்கள் நவீன T20 கிரிக்கெட்டில் தேர்ச்சி பெறும் வாய்ப்புகளை இழந்துவிட்டனர். மற்ற நாடுகளிலும் நடைபெறும் T20 லீக் அணிகளை பெரும்பாலும் இந்திய பிஸ்னஸ் குழுக்கள் நடத்துகின்றன” என்றும், பாகிஸ்தான் வாரியம், தேர்வாளர்கள் மற்றும் நிர்வாகிகளிடம் ஒருங்கிணைப்பு இல்லாமை மற்றும் நிலையான கேப்டன் தேர்வு இல்லாததாலும் இந்த வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். T20 உலக அரங்கில் மீண்டும் உயரமடைவதற்கான ஒரே வழி, தொடர்ச்சியான வெற்றிகள் மற்றும் சரியான நிர்வாகம் என்பதை அவர் வலியுறுத்தினார்.