அமெரிக்காவில் நியூயார்க் மெட்ரோ ரயிலில், பெண் ஒருவர் “MAGA” (Make America Great Again) தொப்பியை அணிந்திருந்த நபரை “இன வெற்றியாளர்” என திட்டி, அவர் அணிந்திருந்த தொப்பியை பறிக்க முயன்ற போது கீழே விழும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவலாக வைரலாகியுள்ளது.

இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், ரயில் ஒரு நிலையத்தில் நிற்க, அந்த நபர் ரயிலில் இருந்து இறங்குகிறார். அவரைத் தொடர்ந்து அந்த பெண் வெளியே சென்று, அவரது தொப்பியை பிடிக்க முயற்சிக்கிறார். ஆனால், அந்த முயற்சியில் தோல்வியடைந்து அவர் விழுகிறார்.

இந்த வீடியோ வைரலாகி மக்கள் மத்தியில் கலவையான கருத்துகளை ஏற்படுத்தியுள்ளது. சிலர் இந்த வீடியோவை பார்த்த சிலர், அந்த பெண்ணின் செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். “ஒரு நபர் எந்த அரசியல் கருத்தை கொண்டிருந்தாலும், அதற்காக அவர்களை தாக்குவது தவறு,” என பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

MAGA தொப்பி டொனால்ட் டிரம்ப் தனது 2016 தேர்தல் பிரச்சாரத்தில் அறிமுகப்படுத்திய “Make America Great Again” என்ற வாசகத்துடன் வந்தது. இது அவரது ஆதரவாளர்களுக்கான அரசியல் அடையாளமாக மாறியிருந்தாலும், விமர்சகர்கள் இதை பாகுபாடான சின்னமாக பார்க்கின்றனர்.