
சென்னை மாவட்டம் கிண்டியில் உள்ள ஐடிசி கிரான்ட் சோழா நட்சத்திர ஹோட்டலில் தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தொகுதி மறு சீரமைப்புக்கான கூட்டுக் குழு கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன், தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, கர்நாடகா துணை முதல்வர் கே.டி சிவக்குமார், பஞ்சாப் முதல்வர் பகவான் உள்ளிட்ட ஏழு மாநில நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.
இந்த நிலையில் கர்நாடக துணை முதல்வர் டி.கே சிவகுமார் கூறியதாவது, மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறு சீரமைப்பு என்பது மற்ற மாநிலங்கள் மீது நடத்தப்படும் அரசியல் தாக்குதல். நாட்டு மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இந்த கூட்டு நடவடிக்கை குழு உள்ளது என கூறியுள்ளார். இதனையடுத்து பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் சிங் மான் தொகுதி மறு சீரமைப்புக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு ஆம் ஆத்மி 100 சதவீதம் ஒத்துழைப்பு வழங்கும் என கூறியுள்ளார்.