
நாடு முழுவதும் அடுத்த வருடம் தொகுதி மறு சீரமைப்பு மேற்கொள்ள மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மாநில வாரியாக மக்கள் தொகை அடிப்படையில் இந்த பணிகள் நடைபெறும். இதனால் தமிழகம் போன்ற மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்களில் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை குறையும் என்று கூறப்படுகிறது. எனவே இதற்கு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.
இந்நிலையில் இன்று முதலமைச்சர் தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் தொகுதி மறு வரையறையை எதிர்த்து கூட்டம் நடைபெற்றது. இதில் பல மாநில கட்சி தலைவர்களும் கலந்து கொண்டனர். இந்நிலையில் ஜார்க்கண்ட் முதல்வர் இந்த கூட்டத்தை வரவேற்றுள்ளார். வெறும் மக்கள் தொகை அடிப்படையில் மட்டுமே தொகுதிகள் மறுவறை செய்யப்படுவது நியாயமாகவும் சமமாகவும் இருக்க முடியாது. தொகுதி மறு சீரமைப்பு தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஏற்பாடு செய்த கூட்டத்தை வரவேற்கிறேன் என்ற அவர் தெரிவித்துள்ளார்.