
ஐபிஎல் 2025 சீசன் இன்று கோலாகலமாக தொடங்குகிறது. ஆரம்ப போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கிடையே பிரம்மாண்டமாக நடக்கிறது. ஈடன் கார்டனில் நடைபெறும் இந்த போட்டி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. தொடக்க போட்டியில் வெற்றி பெறும் நோக்குடன் இரண்டு அணிகளும் சிறப்பாக விளையாடி வருகிறது.
இதேநேரத்தில், ஐபிஎல் நிர்வாகம் சூப்பர் ஓவர் தொடர்பாக புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. போட்டி சமநிலையில் முடிந்தால், சூப்பர் ஓவர் முறையில் முடிவெடுக்கப்படும் என்பது வழக்கம். ஆனால், இந்த முறையை ஒரு மணி நேரத்திற்குள் மட்டும் நடைமுறைக்கு கொண்டு வர முடியும் என நிர்வாகம் தற்போது அறிவித்துள்ளது.
இந்த ஒரு மணி நேரத்திற்குள் எத்தனை சூப்பர் ஓவர் வேண்டுமானாலும் நடைபெறலாம், ஆனால் காலவரையிலான கட்டுப்பாடும் இதில் இடம் பெற்றுள்ளது. இதன் மூலம் போட்டி நேரத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தோடு, ரசிகர்களுக்கும் உற்சாகமான முடிவையும் வழங்கும் நோக்கத்தில் இந்த மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது