
அரியலூர் மாவட்டம் நான்கு ரோடு பகுதியில் உள்ள ராஜாஜி நகர் பகுதியை சேர்ந்தவர் கஜேந்திரன் (61). இவர் பெட்ரோல் பங்க் ஒன்றை நடத்தி வருகிறார். இந்த பெட்ரோல் பங்கில், கடந்த 3 ஆண்டுகளாக முதுநிலை மேலாளராக திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வட்டம் கிளியநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த சதீஷ் (37) பணியாற்றி வந்துள்ளார்.
இந்த நிலையில் சதீஷ் கடந்த சில மாதங்களாக பெட்ரோல் பங்கின் வரவு செலவு விவரங்களை உரிமையாளருக்கு தெளிவாக கணக்கில் காட்டாமல், மொத்தம் ரூ.28.46 லட்சத்தை மோசடி செய்துள்ளார். இதுகுறித்து கஜேந்திரன் கேட்ட போது சதீஷ் சரியாக பதில் அளிக்கவில்லை.உன்ன இதனால் கஜேந்திரன் அளித்த புகாரின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் சிக்கந்தர் பாட்ஷா விசாரணை நடத்தி, சதீஷை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்.