
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே நேற்று இரவு ரவுடி ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அந்த பகுதியைச் சேர்ந்த ரவுடி காளீஸ்வரன் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவர் நேற்று இரவு வீட்டின் வெளியே வந்த போது 3 பைக்குகளில் வந்த மர்ம நபர்கள் அவரை அரிவாளால் வெட்டி கொலை செய்தனர்.
இந்த கொலை தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் முன் பகை காரணமாக நடந்திருக்கலாம் என்ற முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த கொலைக்கு சிறையில் இருந்து மற்றொரு ரவுடி சதி திட்டம் தீட்டியதாக கூறப்படுகிறது. மேலும் இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.