மனித வாழ்க்கை நிலையற்ற தன்மை உடையது என்பதை எடுத்துக்காட்டும் விதமாக சமீபத்தில் சமூக வலைதளத்தில் வெளியான வீடியோ ஒன்று வைரலாகி  வருகிறது.  இந்த வீடியோவில், உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள புலந்த்ஷாஹரில் நபர் ஒருவர் நல்ல உடல் தகுதியுடன், சுறுசுறுப்பாக தெருவில் நடந்து செல்கிறார்.

அப்போது திடீரென கண்ணிமைக்கும் நேரத்தில் எதிர்பாராத விதமாக தரையில் விழுந்த சில நொடிகளிலேயே பரிதாபமாக இறந்துள்ளார்.இது ஒரு இருதய மாரடைப்பு காரணமாக நிகழ்ந்துள்ளது என மருத்துவர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.  இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி பலரும் தங்களது கருத்துக்களையும், வருத்தத்தையும் தெரிவித்து வருகின்றனர்.