டெல்லியைச் சேர்ந்த கான்டென்ட் கிரியேட்டர் இஷு தவாரி, தனது “Unethical Life Hacks” என்ற தொடருக்காக, சாநக்கியபுரியில் உள்ள ஒரு பைவ் ஸ்டார் ஹோட்டலில் இலவசமாக காலை உணவு சாப்பிட முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பஜாமா அணிந்து, பிளாக்கில் இருந்து பெறப்பட்ட போலி ரூம் நம்பர் “3206”யை கூறி, தன்னுடன் சென்ற குழுவினருடன் ஹோட்டலின் “Breakfast” பகுதியில் சந்தேகம் இல்லாமல் நுழைந்துள்ளார்.

பெரிய அளவில் வகைகள் நிறைந்த பஃபே உணவை சாப்பிட்ட பிறகு, இந்த திட்டம் வெற்றி பெற்றுவிட்டதாக இவர் கேமரா முன்னே கூறியிருந்தார். ஆனால், தன்னுடன் வந்தவர் அவரது கைபேசியை அங்கேயே விட்டுவிட்டார். அதைத் திரும்பப் பெறும்போது, ஹோட்டல் ஊழியர்கள் கொடுக்கப்பட்ட அறை எண்ணை சரிபார்த்து அது வேறு விருந்தினருக்குரியது என்பதை அறிந்து, இஷு தவாரியிடம் சந்தேகத்துடன் விசாரணை மேற்கொண்டனர்.

தொடக்கத்தில் “தவறாக வந்துவிட்டோம்” எனத் திட்டவட்டமாக மறுத்த தவாரி, பின்னர் உண்மையை ஒப்புக்கொண்டு ரூ.3,658 கட்டிச் சென்றதாகக் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் 1.7 மில்லியன் பார்வைகளை பெற்று வைரலான நிலையில், பலரும் இதை விமர்சித்துள்ளனர். “இது போன்ற சேட்டைகளால் தவறான செய்தி பரவுகிறது”, இதற்கு நெட்டிசன்கள் கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளனர்.