
ஐபிஎல் 16வது சீசனில் தோனி கால் மூட்டி வலி காரணமாக அவதிப்பட்டதால் ஐபிஎல் 17வது சீசனோடு ஓய்வு பெற்று விடுவார் என்று கூறப்பட்டது. அந்த சீசனை தொடர்ந்து 18-வது சீசனுக்கு முன்பாக மெகா ஏலம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டதால் தோனியை சிஎஸ்கே தக்கவைக்குமா என்ற கேள்வி இருந்து வந்த நிலையில் UN CAPPED வீரர் இடத்தில் தோனியை தக்க வைத்தார்கள். இருப்பினும் காலில் ஏற்பட்ட காயத்தால் 18-வது சீசனில் விளையாடும் போதே ஓய்வு அறிவிப்பார் என்று கருதப்பட்டது. இந்த நிலையில் முதல் போட்டியின் மும்பை இந்தியன்ஸ்க்கு எதிராக விளையாடியதை வைத்து பார்க்கும் போது இந்த சீசனோடு ஓய்வு பெறுவதற்கு வாய்ப்பு குறைவு தான் என்று பலரும் கூறி வருகிறார்கள்.
இந்நிலையில் அம்பத்தி ராயுடு தோனி குறித்து கூறுகையில், ” தோனி கேப்டன் பதவியில் இருந்து அவர் ராஜினாமா செய்த பிறகும் ருத்ராஜிற்கு தொடர்ந்து அவர் அறிவுரைகளை கூறி வருகிறார். அது மட்டுமா கால் முட்டியில் வலி என்றார்கள் ஆனால் 18-வது சீசனில் சுறுசுறுப்பாக விக்கெட் கீப்பிங் செய்கிறார். வலை பயிற்சி பொது சிக்ஸர்களை பறக்க விட்டார். அவரிடம் தற்போது என்ன குறை இருக்கிறது. 43 வயது ஆகிறது என்று மட்டுமே சொல்ல முடியும். வேறு என்ன சொல்ல முடியும். தற்போது மிகவும் சுறுசுறுப்பாக இருக்கிறார். இதனால் அடுத்த ஐந்து வருடங்கள் வரை அவரால் கிரிக்கெட் விளையாட முடியும் என்று கூறியுள்ளார்.