சிவகங்கை மாவட்டம் கீழக்குளத்தில் யூடியூப் பார்த்து ஒருவர் நாட்டு வெடிகுண்டு தயாரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது முட்புதரில் ஒரு வாலிபர் பதுங்கி இருந்தார். அவரை போலீசார் பிடித்து விசாரித்தனர்.

அந்த விசாரணையில் அவர் அதே பகுதியைச் சேர்ந்த மகேஸ்வரன் என்பதும், யூடியூப் பார்த்து நாட்டு வெடிகுண்டு தயாரித்ததும் தெரியவந்தது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் மகேஸ்வரனை கைது செய்து, அவரிடம் இருந்த 4 நாட்டு வெடிகுண்டு நீள வாள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.