கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளியங்கிரி மலையேறி மக்கள் சாமி தரிசனம் செய்து வருவது வழக்கம். இந்த நிலையில் திருவண்ணாமலையைச் சேர்ந்த வாலிபர் நண்பர்களுடன் வெள்ளியங்கிரி மலை ஏறியுள்ளார்.

இதனையடுத்து மலையேறி விட்டு திரும்பிய நிலையில், மூன்றாவது மலையில் வைத்து அந்த வாலிபர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.