
சென்னை வேளச்சேரி அருகே உள்ள பெரும்பாக்கம் எழில் நகர் பகுதியைச் சேர்ந்த ஜெயா (45), தனது கணவரை பிரிந்து மூன்று மகள்களுடன் தனியாக வாழ்ந்து வருகிறார். அவரது மூன்றாவது மகள், அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வருகிறார். பள்ளி மாணவியான அந்த சிறுமி, அதே பகுதியில் வசிக்கும் இளைஞருடன் கடந்த ஒரு வருடமாக பழகி வந்ததாக தெரிகிறது. இதை ஜெயா கண்டித்தும், மகள் அந்த இளைஞருடன் பழகுவதைத் தொடர்ந்ததால் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.
சம்பவத்தன்று, தாயின் எச்சரிக்கையையும் மீறி மகள் அந்த வாலிபருடன் பேசி பழகியதால் அதிர்ச்சியடைந்த ஜெயா நள்ளிரவு நேரம் தனது வீட்டில் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். குடும்பத்தினரும் அண்டை வீட்டினரும் விரைந்து வந்து அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
மருத்தமனையில் தற்போது தீவிர சிகிச்சையில் ஜெயா சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து பெரும்பாக்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மகளின் காதல் தொடர்பான காரணத்தால் தாய் தீக்குளித்த சம்பவம் அந்த பகுதியைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.