
தமிழக சட்டசபையில் தற்போது பட்ஜெட் மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று சட்டசபை கூட்டத்தொடரின் போது அமைச்சர் செந்தில் பாலாஜி உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் வழங்கிக் கொண்டிருந்தார். அப்போது அதிமுக கட்சியின் பவானி தொகுதி எம்எல்ஏ கே.சி கருப்பண்ணன் பேசினார். அவர் தனியார் நிறுவனங்கள் வேகமாக சோலார் பேனர்களை தயாரிக்கிறது. அவை 100 கேவி திறன் கொண்டதாக இருக்கும் நிலையில் அவற்றை 120 கேவி திறன் கொண்டதாக மாற்ற வேண்டும் என்றார்.
இதனால் மின்வாரியத்திற்கு எந்தவிதமான நஷ்டமும் ஏற்படாது என்று கூறினார். இதுக்கு மாப்பிள்ளை அனுமதிக்க வேண்டுமென்றார். அதாவது அமைச்சர் செந்தில் பாலாஜியை அவர் மாப்பிள்ளை என்று குறிப்பிட்டு பேசினார். அப்போது அவையில் சிரிப்பலை எழுந்தது. பின்னர் கருப்பண்ணன் பழக்க தோஷத்தில் வந்துவிட்டது சாரி சாரி என்றார். மேலும் அவர் அமைச்சர் செந்தில் பாலாஜியை சட்டசபையில் வைத்து மாப்பிள்ளை என்று கூறியது பேசும் பொருளாக மாறி உள்ளது.