
சமீபத்தில் துபாயில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணியை இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன்ஸ் டிராபி பட்டத்தை கைப்பற்றியது. இதற்கான பெரும் பரிசு தொகையையும் பிசிசிஐ வழங்கியது .இந்த கிரிக்கெட் போட்டியை மக்கள் நேரிலும், செல்போன் மூலமாகவும் கண்டு ரசித்தார்கள். இந்தியா- நியூசிலாந்து இடையே நடந்த சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப்போட்டியை நேரில் பார்த்தது மட்டுமின்றி பல கோடி ரசிகர்கள் டிவி, செல்போன், லேப்டாப், டேப் மூலமாக பார்த்தார்கள்.
அதன்படி போன், லேப்டாப், டேப் மூலமாக பார்த்ததன் மூலமாக 100 கோடி ஜிபி டேட்டாவை பயன்படுத்தி கிரிக்கெட் ரசிகர்கள் உலக சாதனை படைத்துள்ளார்கள். செல்போன், டேப் போன்றவற்றின் மூலமாக போட்டி கண்டுகளிக்க100 கோடி ஜிபி டேட்டாவை பயன்படுத்தி உள்ளது சாதனையாக பார்க்கப்படுகிறது. ஐந்து முதல் ஆறு மணி நேரம் நடைபெறும் ஒரு கிரிக்கெட் போட்டிக்கு 100 கோடி ஜிபி டேட்டா பயன்படுத்தப்பட்டது உலக சாதனையாக அமைந்துள்ளது.