
புதுச்சேரி தவளக்குப்பம் அருகே உள்ள அபிஷேகபாக்கத்தைச் சேர்ந்தவர் சுரேஷ் (42). இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 2023-ஆம் ஆண்டு சுரேஷ் 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்த சம்பவத்தில் சிறுமி கர்ப்பமாகியதும், அவரது பெற்றோர் தவளக்குப்பம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் சுரேஷ் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கு புதுச்சேரி போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி போக்சோ சட்டம் பிரிவு 6ன் கீழ் சுரேஷுக்கு சாகும் வரை வரை ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டார். மேலும் ரூ.10,000 அபராதமும் விதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்க நீதிபதி அரசுக்கு பரிந்துரை செய்துள்ளார்.