இன்றைய காலகட்டத்தில் பல்வேறு விதமான வீடியோக்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. அவ்வாறு வெளியான வீடியோ ஒன்றில் தாய் தன் மகள்களை விஷ பாம்பிடமிருந்து காப்பாற்றுகிறார். அதாவது ஒரு தாய் தனது வீட்டின் முன்பு இரு மகள்களுடன் கையில் துணி கூடையை வைத்துக்கொண்டு நின்று கொண்டிருந்தார். அப்போது சுவரின் ஓரமாக வந்த விஷப்பாம்பு ஒன்று வந்தது. அந்தப் பாம்பு சிறுமியின் கால் அருகில் வந்ததால் பயத்தில் சிறுமி அலறினார்.

இதனை அறிந்த தாய் உடனடியாக தைரியமாக செயல்பட்டு அந்த இடத்திலிருந்து தன் மகளை தூக்கினார்.

அதன் பின் அந்த பாம்பு இன்னொரு குழந்தையின் அருகில் வந்த போது தாய் சிறிதும் பயமில்லாமல் அந்த குழந்தையும் காப்பாற்றி பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் சென்றார். இந்த சம்பவம் அவர்கள் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான நிலையில் இணையத்தில் வைரலானது.

இந்த வீடியோ தற்போது 56 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வைகளை கடந்துள்ளது. மேலும் இந்த வீடியோவிற்கு நெட்டிசன்கள் பலரும் அந்த தாயின் புத்திசாலித்தனம் மற்றும் தைரியத்தை பாராட்டி வருகின்றனர்.