ராஷ்மிகா மந்தனா மற்றும் சல்மான் கான் நடிப்பில் நேற்று ரம்ஜான் ஸ்பெஷலாக  ‘சிக்கந்தர்’ திரைப்படம் ரிலீஸ் ஆனது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரிலீஸ் ஆன சிக்கந்தர் திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு நல்ல விமர்சனங்களை பெறவில்லை.

இந்த நிலையல் நடிகர் சல்மான் கான், ராஷ்மிகா மந்தனாவை காரிலிருந்து வெளியே இழுத்து, புகைப்படக்காரர்களுக்கு போஸ் கொடுக்க அழைத்ததாக கூறப்படும் வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் பரவி வருகிறது. இந்த வீடியோவில் சல்மானின் நடத்தை ராஷ்மிகாவிடம் அத்துமீறலாக இருந்தது என நெட்டிசன்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.