
இன்றைய காலகட்டத்தில் சேமிப்பின் முக்கியத்துவத்தை அறிந்து பலரும் சேமிக்க தொடங்கியுள்ளார்கள். பொதுவாக வாடிக்கையாளர்கள் தங்களுடைய கையில் இருக்கும் பணத்தை முதலீடு செய்து நீண்ட நாட்களுக்கு பிறகு அதை அதிக வருமானமாக மாற்றுவதற்காக பணத்தை பல்வேறு திட்டங்களில் சேமித்து வருகிறார்கள். இதற்கு லாபகரமான வட்டியும் கிடைக்கிறது. வங்கிகளில் சேமிப்பு கணக்கு தொடங்குவது போலவே போஸ்ட் ஆபீசில் பல்வேறு சேமிப்பு திட்டங்கள் இருக்கிறது. இதில் ஏராளமான மக்கள் பயனடைந்து வருகிறார்கள்.
மேலும் போஸ்ட் ஆபீஸ் திட்டத்தில் நல்ல லாபம் மற்றும் நல்ல வட்டியும் கிடைக்கிறது. அந்த வகையில் அஞ்சல் அலுவலகம் மாதாந்திர வருமானத் திட்டத்தின் கீழ் தனிநபராக ஒன்பது லட்சம் வரை முதலீடு செய்யலாம். அதே போல கூட்டுக்கணக்காக 15 லட்சம் வரை முதலீடு செய்யலாம். இந்த திட்டத்தின் மூலம் ஐந்து ஆண்டுகள் வரை மாதாந்திர வருமானம் கிடைக்கும். ஐந்து லட்சம் ரூபாய் 7.4% வட்டியும் கிடைக்கிறது. அதாவது 3080 ரூபாய் வட்டியாக கிடைக்கிறது.