
தமிழ்நாடு அரசின் மாநில திட்டக் குழுவில் உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வுச் செய்ய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் .
பணி:குழு தலைவர் , துறை நிபுணர்கள்
காலிப்பணியிடங்கள்: 9
கல்வித்தகுதி: குழு தலைவர் பதவிக்கு பொருளாதாரம்/புள்ளியியல்/ தரவு அறிவியல்/ பொதுக் கொள்கை/ பொது நிர்வாகம் ஆகியவற்றில் முதுகலை பட்டம் அல்லது நிதி பிரிவில் எம்பிஏ அல்லது மேனேஜ்மெண்ட் பிரிவில் முதுகலை டிப்ளமோ. M&E பிரிவில் டிகிரி அல்லது டிப்ளமோ உள்ளவர்களுக்கு முன்னுரிமை.
துறை நிபுணர்கள் பதவிக்கு, துறை சார்ந்த சம்பந்தப்பட்ட பிரிவுகளில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் துறை ரீதியான குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் அனுபவம் தேவை.
பணி அனுபவம்: 8 ஆண்டுகள்
வயதுவரம்பு: 50 வயதிற்குள்
சம்பளம்: குழு தலைவர் – மாதம் ரூ.1,50,000 சம்பளம் . துறை நிபுணர் – மாதம் ரூ.1,00,000 சம்பளம்
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் https://spc.tn.gov.in/
கடைசித்தேதி: ஏப்ரல் 4-ம் தேதி மாலை 6 மணிக்குள்