
திருநெல்வேலி மாவட்டம் களக்காடு சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன்(24). இவர் வள்ளியூரில் நடைபெற்ற தனது நண்பரின் சகோதரி திருமணத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்று விட்டு மீண்டும் ஊருக்கு வந்து கொண்டிருந்தார்.
இந்த நிலையில் கேசவனேரி சாலையில் சென்ற போது வேகத்தடையில் பாலசுப்பிரமணியனின் மோட்டார் சைக்கிள் ஏறி இறங்கியது. இதனால் நிலைதடுமாறி தூக்கி வீசப்பட்ட பாலசுப்பிரமணியன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பாலசுப்ரமணியத்தின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.