தமிழக சட்டசபை கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில் முதல்வர் ஸ்டாலின் மீனவர்கள் பிரச்சினை குறித்து பேசினார். அவர் மீனவர்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்த நிலையில், சட்டசபைக்கு வந்த அதிமுகவினர் யார் அந்த தியாகி என்ற பேட்ஜ் அணிந்து வந்திருந்தனர்.

அதாவது தமிழக டாஸ்மாக்கில் ஆயிரம் கோடி ரூபாய் வரை ஊழல் நடந்துள்ளதாக அமலாக்கத்துறை கூறிய நிலையில் இது தொடர்பாக பேச வேண்டும் என்று சட்டசபையில் எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை விடுத்தார். ஆனால் அந்த வழக்கு சென்னை உயர்நீதி மன்றத்தில் விசாரணைக்கு இருப்பதால் பேச அனுமதி கொடுக்க முடியாது என்று சபாநாயகர் கூறிவிட்டார். இதனால் அதிமுகவினர் யார் அந்த தியாகி என்று கோஷம் எழுப்பினார்.

இதனால் சட்டசபையில் சலசலப்பு ஏற்பட்ட நிலையில் அவர்களை சபையிலிருந்து சபாநாயகர் வெளியேற்றியதோடு இன்று ஒரு நாள் மட்டும் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். இந்நிலையில் அதிமுகவினர் அனைவரும் சட்டசபையில் இருந்து வெளியேறிய நிலையில் செங்கோட்டையன் மட்டும் சட்டசபையில் இருந்து வெளியேறியவில்லை. அதாவது சட்டசபையில் கவனஈர்ப்பு தீர்மானம் குறித்து பேசி முடித்த பின் செங்கோட்டையன் அவையை விட்டு வெளியேறினார்.

மேலும் ஏற்கனவே செங்கோட்டையன் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி இடையே விரிசல் போக்கு ஏற்படுவதாக கூறப்படும் நிலையில் அவர் தனியாக டெல்லிக்கு சென்று நிர்மலா சீதாராமனை சந்தித்தார். இந்த நிலையில் இன்று சட்டசபையில் அதிமுகவினர் மொத்தமாக வெளிநடப்பு செய்த நிலையில் அவர் மட்டும் உரையை முடித்த பிறகு தனியாக வெளியேறியது பரபரப்பாக பேசப்படுகிறது.