கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சில பெண்கள் சுற்றுலாவுக்காக ஊட்டிக்கு சென்று விட்டு மதிகேரி பகுதிக்கு வந்தனர். அவர்கள் அந்த பகுதியில் கடந்த 5ம் தேதி ஒரு தங்கும் விடுதியில் தங்கியிருந்தனர். அப்போது அதிகாலை 3 மணியளவில் அவர்கள் தங்கியிருந்தால் அறையின் கதவை விடுதியின் கண்காணிப்பாளர் பிரவீன் தட்டியுள்ளார். இருப்பினும் அந்த பெண்கள் கதவை திறக்கவில்லை.

இதைத்தொடர்ந்து1 மணி நேரம் கழித்து கதவைத் திறந்த போது அவர்களுடைய காரின் 3 டயர்களும் குத்தி சேதப்படுத்தப்பட்டதை கண்டுபிடித்தனர். இதனை கண்காணிப்பாளர் பிரவீன், பாபு(60) என்பவரின் உதவியுடன் செய்துள்ளார் என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில் அவர்கள் வழக்கு பதிவு செய்து பிரவீன் மற்றும் பாபுவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதில் பாபுவிற்கு ஜாமீன் வழங்கப்பட்ட நிலையில் முக்கிய குற்றவாளியான பிரவீன் 14 நாட்கள் நீதிமன்ற காவல் விடுக்கப்பட்டுள்ளது . மேலும் தங்கும் விடுதியின் உரிமையை ரத்து செய்ய வேண்டும் என்று சுற்றுலாத்துறை அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.