
சென்னை மாவட்டத்தில் உள்ள புதுவண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் பிரவீன் ராஜ், மனோஜ் குமார். இவர்கள் இருவரும் அப்பகுதியில் சாலையில் தனியே செல்பவர்களிடம் வழிப்பறியில் ஈடுபடுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
அதன்படி காவல்துறையினர் நேற்று இரவு அப்பகுதியில் பாதுகாப்பில் ஈடுபட்டனர். அப்போது காவல்துறையினர் வருவதை கவனித்த இரு இளைஞர்களும் தப்பி ஓடுவதற்காக அங்கிருந்த சுவர் மீது ஏறி குதித்தனர்.
இதனால் இருவருக்கும் கால் முறிவு ஏற்பட்டதால் காவல்துறையினர் இரு இளைஞர்களையும் கைது செய்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.
மேலும் வழிப்பறியில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இசசம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.