மயிலாடுதுறை மாவட்டம் வேப்பங்குளம் பெரிய தெருவை சேர்ந்தவர் ராஜபாண்டியன். இவரது மனைவி கோடீஸ்வரி. இந்த நிலையில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது.

கடந்த 2019-ஆம் ஆண்டு தகராறு ஏற்பட்டபோது ராஜபாண்டியன் தனது மனைவியின் தலையை பிடித்து சுவற்றில் ஓங்கி அடித்தார். இதனால் ரத்தம் வெளியேறி சம்பவ இடத்திலேயே கோடீஸ்வரி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் ராஜபாண்டியை கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிமன்றம் ராஜபாண்டிக்கு ஆயுள் தண்டனையும் 5000 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டது.