பிரபல நடன கலைஞர் ராம் சஹாய் பாண்டே(92) உடல்நல குறைவால் உயிரிழந்தார். மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ராம் சகாய் பாண்டே 18 நாடுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமப்புற நடன நிகழ்ச்சிகளை நடத்தி இந்தியாவின் பெருமையை உலகறிய செய்துள்ளார்.

இவரது கலை சேவையை பாராட்டி கடந்த 2022 ஆம் ஆண்டு மத்திய அரசு ராம் சஹாய் பாண்டேவுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தது. இவரது இறப்பிற்கு மத்திய பிரதேச முதலமைச்சர் உள்பட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.