
ஐபிஎல் தொடரில் நேற்றைய ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியானது முதலில் பேட்டிங்க தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கி பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 219 ரன்களை குவித்தது. இதனை அடுத்து 220 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலமாக சென்னை அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணியானது 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை தன்வசம் ஆக்கியது.
Until we meme again! 🤝 @PunjabKingsIPL #PBKSvCSK #MemeSquad 🦁💛 pic.twitter.com/HnDwFZVPsy
— Chennai Super Kings (@ChennaiIPL) May 5, 2024
https://t.co/MLr8K0eGYy pic.twitter.com/j1Ra0hrL0n
— Punjab Kings (@PunjabKingsIPL) April 8, 2025
இந்த வெற்றிக்குப் பிறகு பஞ்சாப் அணி தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் மாஸ்டர் படம் விஜய் படத்தை பகிர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பதிலடி கொடுத்துள்ளது. அதாவது இந்த போட்டிக்கு முன்பாக மாஸ்டர் படத்தின் இறுதி காட்சியில் விஜய் – விஜய் சேதுபதி மோதும் புகைப்படத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பகிர்ந்து இருந்தது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பஞ்சாப் அணி பகிர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது .