
இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரல் ஆகிறது. அந்த வகையில் தற்போது ஒரு பெண்ணின் உதட்டை ஆமை கடித்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஒரு 55 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் ஒரு குட்டையில் அமர்ந்து ஆமைகளை ஒரு கூடையில் பிடித்துக் கொண்டிருக்கிறார்.
அவர் திடீரென அந்த ஆமையை ரசிக்க வைப்பதற்காக ஆமையின் வாயோடு வாய் வைத்த ஊதுகிறார். அந்த ஆமை கோபத்தில் அந்த பெண்ணின் கீழ் உதட்டை பிடித்து கடித்து வைத்தது. அந்த ஆமை நீண்ட நேரமாக அந்த பெண்ணின் உதட்டை கடித்தவாரே இருந்த நிலையில் போராடி எப்படியோ அதிலிருந்து அந்த பெண் மீண்டு வந்தார். மேலும் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்..
View this post on Instagram