ஹரியானாவின் குருகிராம் பகுதியில் ஒரு நபர், தனது மனைவியின் காதலனுடன் வீட்டில் இருக்கும்போது பிடித்ததையடுத்து, மீரட் சம்பவம் போல உன்னை துண்டு துண்டாக வெட்டி ட்ரம்மில் போடுவேன் என மிரட்டப்பட்ட அதிர்ச்சியான சம்பவம் நடந்துள்ளது.

பசாய் என்க்ளேவில் வசிக்கும் மௌசம் என்பவர், இரவு ஷிப்ட் வேலை முடித்து காலை 6 மணிக்கு வீடு திரும்பியபோது, அவரது மனைவி வீட்டில் இல்லை என்பதை கவனித்தார். அவர் மனைவியை தேடியபோது, வீட்டின் மேல்மாடியில் மனைவியுடன் நவீன் என்பவரை கண்டார்.

மௌசம் அவர்களை விசாரிக்க முயன்றதும், நவீன் திடீரென துப்பாக்கியை எடுத்து அவருடைய தலையில் வைத்துச் சுட்டு விடுவேன் என மிரட்டி, மீரட்டில் நடந்த பயங்கர கொலை சம்பவம் போலவே உன்னையும் முடிவுக்கு கொண்டு வருவேன் என கூறியுள்ளார்.

இதையடுத்து மௌசம் உடனடியாக அக்கம் பக்கத்தவரை அழைத்துள்ளார். ஆனால் அந்த இருவரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து மௌசம், அருகிலுள்ள காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்துள்ளார்.

அவர் ஹரியானாவின் ஜாஜ்ஜார் மாவட்டத்தைச் சேர்ந்த டாக்ஸி ஓட்டுநரான மௌசம் பஞ்சாபின் மோக்கா மாவட்டத்தைச் சேர்ந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இரு குடும்பத்தினரும் இந்தத் திருமணத்துக்கு ஒத்துழைக்கவில்லை.

இதனால் தம்பதியினர் தனியாக குருகிராமில் வசித்து வந்துள்ளனர். அதன் பிறகு மௌசத்தின் மனைவிக்கு நவீனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.