திருச்சி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் திருவிழா மிக பிரம்மாண்டமாக நடைபெறும் நிலையில் ஏராளமான பக்தர்கள் வருகை புரிவார்கள். அந்த வகையில் சமயபுரம் மாரியம்மன் திருக்கோவிலில் தேர் திருவிழா வருகிற ஏப்ரல் 15ஆம் தேதி நடைபெற இருக்கிறது.

இந்த திருவிழாவில் உள்ளூர் மட்டும் என்று வெளியூர்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இதன் காரணமாக அன்றைய தினம் மாவட்ட ஆட்சியர் உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்த விடுமுறையை ஈடு செய்வதற்காக அடுத்த மாதம் 3-ம் தேதி வேலை நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.