அசாமின் குவாஹட்டி நகரில் உள்ள நரெங்கி இராணுவம் பள்ளியில் யானை ஒன்று திடீரென நுழைந்து, நடந்து செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த மனதை உருக்கும் காட்சி சமீபத்தில் நடைபெற்றதாக கூறப்படுகிறது. வீடியோவில், யானை பள்ளி வகுப்பறை வளாகங்களுக்கு வெளியே அமைதியாக நடந்து செல்லும் காட்சி பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

வீடியோவை பகிர்ந்த ஒரு இணைய பயனர், அந்த யானை அங்கு உள்ள இராணுவம் முகாமுக்கு அடிக்கடி வருவதாகவும், முகாமில் உள்ள சமையலறையில் யானைக்காக தனியாக உணவு வைக்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், யானை முகாமில் உள்ள குளத்தில் நீராடி விளையாடும் பழக்கம் உள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தின் போது, யானையை சீராக வழிநடத்தி பள்ளி வளாகத்திற்கு வெளியே அழைத்துச் சென்றதாக ராணுவ வீரர்கள் தெரிவித்துள்ளனர்.