பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் பாம்பன் பாலத்தை திறந்து வைப்பதற்காக தமிழகம் வந்த நிலையில் அந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொள்ளவில்லை. இதற்கு அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்தார். இது குறித்து அவர் கூறும் போது, ஒரு நாட்டின் பிரதமரை வரவேற்பது முதல்வரின் முக்கியமான கடமை. ஆனால் அதனை செய்யாமல் முதல்வர் ஸ்டாலின் சொன்ன காரணத்தை ஏற்றுக் கொள்ள முடியாது.

முதல்வர் ஊட்டிக்கு சென்றதால் அவருக்கு இலங்கையில் பிரதமர் மோடி பேசியது தெரியவில்லை. அவர் தமிழக மீனவர்களையும் சிறைபிடிக்கப்பட்ட படகுகளையும் விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். கச்சத்தீவு மீட்பு பற்றி யாரும் பேச வேண்டாம். கட்சித் தலைவர் பதவி மட்டும் இல்லை எனில் நான் இன்னும் களத்தில் நின்று போராடுவேன்.

பதவிகள் வரும் போகும் என்பதால் அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் களத்தில் நின்று எப்போதும் போராட வேண்டும். நான் திமுகவின் ஊழலை வெளிச்சம் போட்டு காட்டுவேன். இதில் எந்த மாற்றமும் கிடையாது. நான் பிரதமர் மோடிக்காக தான் அரசியலுக்கு வந்தேன்.

அவர் சொன்னால் நான் கிணற்றில் கூட குதிப்பேன். நான் ஒரு கட்சியை பார்த்தோம் அல்லது அதன் சித்தாந்தத்தை பார்த்து அரசியலுக்கு வரவில்லை. பிரதமர் மோடி சொன்னால் அதனை கண்ணை மூடிக்கொண்டு செயல்படுத்துவேன். மேலும் அவருடைய கட்டுப்பாடுகளை எப்போதுமே முழுமையாக ஏற்றுக் கொள்வேன் என்று கூறினார்.