
உலகம் முழுவதும் AI தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வருகிறது. இந்நிலையில் ராமேஸ்வரத்தில் உள்ள கிரைஸ்ட் தீ கிங் சீனியர் செகண்டரி இன்டர்நேஷனல் சிபிஎஸ்இ பள்ளியில் AI தொழில்நுட்பத்தால் செய்யப்பட்ட மார்க்ரேட் என்ற பெயரிடப்பட்ட ரோபோட்டிக் ஆசிரியர் பணிக்காக அப்பள்ளியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான அறிமுக நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர், நகர சபை சேர்மன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.
இதுகுறித்து பள்ளி முதல்வர் ஷாலினி கிரஹாம் கூறியதாவது, மனித உருவத்தில் உள்ள இந்த AI ஆசிரியை பள்ளி மாணவர்கள் கேட்கும் கேள்விக்கு பதில் அளிக்கும். இந்த AI ரோபோட்டிக் மாணவர்களின் கல்வி திறனை ஊக்குவிப்பதற்காக தொடங்கப்பட்டது என்றும் கூறினார். இந்த நிகழ்ச்சியில் தாசில்தார்கள் பலர் கலந்து கொண்டனர். இதையடுத்து மாணவர்கள், AI ரோபோடிக்கிடம் பல்வேறு கேள்விகளை கேட்டனர். அதற்கு ரோபோடிக் ஆசிரியை பதிலளித்தது. இதனை மாணவர்கள் ஆச்சரியத்துடன் பார்த்து ரசித்தனர்.