
அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பொறுப்பேற்றதில் இருந்து பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் நாடுகளுக்கு இடையே பரஸ்பர வரிவிதிப்பு என்ற முறையில் பதிலுக்கு பதில் வரியை விதித்து வருகிறார். இதனால் உலக அளவில் வர்த்தக போர் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பரஸ்பர வரி விதிப்பில் சீனாவுக்கு அதிகமாக வரி விதிக்கப்பட்டுள்ள நிலையில் பதிலுக்கு சீனாவும் வரிவிதித்தது.
முதலில் 34 சதவீதம் சீனா வரிவிதித்த நிலையில் பின்னர் 104 சதவீதமாக வரியை உயர்த்தியதால் அவர்கள் 84 சதவீதமாக வரியை உயர்த்தினர். இதனால் கோபத்தில் 125 சதவீதமாக ட்ரம்ப் வரி விதித்த நிலையில் இனியாவது சீனா திருந்த வேண்டும் என்று எச்சரித்துள்ளார். அதே நேரத்தில் இந்தியா உட்பட 75-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பதிலுக்கு பதில் வரி விதிக்கும் முறையை 90 நாட்களுக்கு ட்ரம்ப் நிறுத்தி வைத்துள்ளார். மேலும் இந்த அறிவிப்பை அவர் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.