மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டத்தில் 42 வயது மதிக்கத்தக்க ஒருவர் வசித்து வருகிறார். இவர் தன்னுடைய மாமனாரிடம் கடந்த 2 மாதங்களுக்கு முன்பாக வேலை வாங்கி தருவதாக கூறி பணம் வாங்கியுள்ளார். ஆனால் அவர் சொன்னபடி வேலை வாங்கி கொடுக்கவில்லை. இதனால் மருமகனுக்கு மாமனாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் மாமனார் தன்னுடைய மருமகனிடம் பணத்தை திரும்ப தருமாறு கேட்டுள்ளார். ஆனால் மருமகன் பணத்தை திரும்பத் தர மறுத்து விட்டதால் கடந்த 7ஆம் தேதி அவர் தன்னுடைய மருமகள் வீட்டிற்கு இரவு நேரத்தில் சென்றார்.

அங்கு தூங்கிக் கொண்டிருந்த அவரை மாமனார் அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதில் ரத்த வெள்ளத்தில் துடி துடித்து அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் அவர்கள உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து அவரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் தப்பி ஓடிய மாமனாரை வலை வீசி தேடி வருகின்றனர்.