சென்னை மாவட்டம் வடபழனி பகுதியில் 13 வயது சிறுவன் தன்னுடைய தந்தையின் காரை அனுமதி இல்லாமல் ஓட்டிச் சென்றதால், அதில் மோதுண்டு படுகாயமடைந்த முதியவர் மகாலிங்கம் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

சம்பவம் கடந்த வாரம் குமரன் நகர் மெயின் சாலையில் நடைபெற்றது. ஷாம் என்ற நபர், தனது மகனிடம் காரின் மீது கவர் போடச் சொல்லி சாவியை கொடுத்திருந்தார். ஆனால் சிறுவன் காரை எடுத்துச் சென்று சாலையில் தாறுமாறாக ஓட்டியுள்ளார்.

சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்த மகாலிங்கம் மீது கார் மோதியதில் அவர் பலத்த காயமடைந்து, உடனடியாக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

சில நாட்கள் தொடர்ந்து சிகிச்சை பின்பு, தற்பொழுது அவர் உயிரிழந்ததாக மருத்துவமனை தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து, சிறுவன் மற்றும் அவரது பெற்றோரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.