
கோவை மாவட்டம் இரத்தினபுரி தில்லை நகரைச் சேர்ந்த கவுதம்(29) தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். நேற்று கவுதம் வேலை முடிந்து வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு நபர்கள் கவுதம் கையில் இருந்த செல்போனை திருடிவிட்டு தப்பி சென்றனர்.
உடனே கவுதம் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பெயரில் போலீசார் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் செல்போனை திருடிவிட்டு சென்ற நபர்கள் ரத்தினபுரியில் உள்ள மேம்பால தடுப்புச் சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானது தெரிய வந்தது.
அந்த விபத்தில் சிக்கிய இரண்டு பேரின் கால்களிலும் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனை பார்த்த அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் இரண்டு பேரையும் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும் இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அந்த தகவலின் பெயரில் விரைந்து வந்த போலீசார் விசாரணை நடத்திய போது கவுதமிடம் இருந்து செல்போனை திருடி விட்டு சென்ற நபர்கள் என்பது தெரிய வந்தது. எனவே இதுகுறித்து ரத்தினபுரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அந்த தகவலின் பெயரில் போலீசார் மருத்துவமனைக்கு சென்று இருவரிடமும் விசாரணை நடத்தினர். விசாரணையில் ஒருவர் ரத்னபுரி தயிர் இட்டேரி பகுதியை சேர்ந்த அம்ப்ரோஸ்(28) என்பதும், மற்றொருவர் ரத்தினபுரி சுப்பையா லேட் அவுட் பகுதியை சேர்ந்த லாரன்ஸ்(27) என்பதும் தெரியவந்தது.
இருவரின் மீது ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளது. இருவரையும் போலீசார் உடனடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்பு இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.