
சீனாவின் ஜியாங்சு மாகாணம் சேர்ந்த ஒரு பெண் வீட்டுப்பாடம் எழுதாத தனது 12 வயது மகளை திட்டியுள்ளார். இதனால் அந்த சிறுமி வாஷிங்மெஷினில் துணி துவைக்கும் லோடிங் பகுதிக்குள் நுழைந்து விட்டார். அதன் பிறகு சிறுமியால் வெளியே வர முடியவில்லை.
இதனால் தாயை உதவிக்கு அழைத்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய் அவசர சேவைகளை உதவிக்கு அழைத்தார். அதன்படி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து சலவை இயந்திரத்தை அகற்ற முடிவு செய்தனர்.
இதற்கிடையே சிறுமி உள்ளே சிக்கிக் கொண்டு வலிக்கிறது என அழுது கொண்டே இருந்தார். இதனால் தீமைப்பு வீரர்கள் வாஷிங்மெஷினின் வெளிப்புறத்தை ஹைட்ராலிக் கட்டரை பயன்படுத்தி அகற்றினர். சுமார் 15 நிமிட போராட்டத்திற்கு பிறகு பெரிய காயம் இல்லாமல் சிறுமி மீட்கப்பட்டார்.