தமிழக பாஜக கட்சியின் தலைவர் பதவிக்கு இன்று விருப்பமனு தாக்கல் செய்யப்பட்டது. பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் தலைவர் பதவிக்கு மனு தாக்கல் செய்த நிலையில் தற்போது அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி தமிழக பாஜக கட்சியின் புதிய மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தென் மாவட்டத்திலிருந்து முதல்முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன் பிறகு அண்ணாமலை தேசிய அரசியலில் ஈடுபட இருக்கிறார். இதனை மத்திய மந்திரி அமித்ஷா உறுதிப்படுத்தினார். மேலும் அடுத்து வரும் சட்டசபை தேர்தலை அதிமுக தலைமையில் பாஜக சந்திக்கும் என்றும் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு பாஜக மற்றும் அதிமுக இணைந்த ஆட்சி அமைக்கும் என்றும் அமித்ஷா கூறினார்.

மேலும் இன்று அமித்ஷா தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் செய்தியாளர்கள் சந்திப்பில் ஈடுபட்ட நிலையில் பாஜக மாநில தலைவர் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் அதிமுகவுடன் கூட்டணி குறித்து அறிவிப்பையும் அமித்ஷா உறுதிப்படுத்தியுள்ளார்